ஆற்றில் விழுந்து மூழ்கிய ஹெலிகாப்டர் - 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!
ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் விபத்து
அமெரிக்கா, மன்ஹாட்டன் நகரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளை ஹெலிகாப்டர் ஒன்று ஏற்றி சென்றது. திடீரென ஹட்சன் நதியில் (Hudson River) விழுந்து விபத்திற்குள்ளானது.
இதில் பைலட் உள்பட 6 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் புறப்பட்ட 18 நிமிடங்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.
6 பேர் பலி
அதிலிருந்தவர்கள் சுதந்திர தேவி சிலை உள்ளிட்டவற்றை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பும் போது இந்த விபத்து நடந்துள்ளதாகவும், உயிரிழந்த 6 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் நியூயார்க் மேயர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் இறந்தவர்கள் ஸ்பெயின் நாட்டின் சீமன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என்று கூறப்படுகிறது.
தற்போது இதுதொடர்பான விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.