கார் பந்தயத்தில் நிகழ்ந்த பயங்கர விபத்து; 8 வயது சிறுமி உள்பட 6 பேர் உயிரிழப்பு !
கார் பந்தயப் போட்டியில் மக்கள் மீது கார் பாய்ந்து 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார் பந்தயம்
இலங்கையில் உள்ள பதுளை மாவட்டம் தியத்தலா பகுதியில் கார் பந்தய போட்டி நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். இதனை பார்க்க மக்கள் பலர் திரளாக திரண்டனர். மலைப்பகுதியில் நடைபெற்ற கார் பந்தயத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
அப்போது தடத்தில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று நிலை தடுமாறி விபத்திற்குள்ளானது. இருப்பினும், அடுத்தடுத்து வந்த கார்கள் கடந்து சென்றனர். விபத்து நடந்ததைக் கண்ட ஓட்டுநர் ஒருவரின் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
நள்ளிரவில் நண்பர்களுடன் கார் ரேஸ்.. விபத்தில் சிக்கிய சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகன் - 3 பேர் படுகாயம்!
பயங்கர விபத்து
இதன் காரணமாக அந்த கார் தடத்தின் அருகே நின்ற பார்வையாளர்கள் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக பாய்ந்தது பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பார்வையாளர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து, படுகாயமடைந்த அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வரும் ஓர் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், கார் பந்த போட்டி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உரிய பாதுகாப்பு வசதிகளின்றி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில், விபத்தின் போது பார்வையாளர்கள் எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.