6 நாட்களும் விரதம் இருக்க முடியலையா? இதை மட்டும் முருகனுக்கு செய்யுங்க போதும்!
கந்த சஷ்டியில் தினசரி வழிபாடு செய்வதும் முழு பலன்களையும் தரும்.
மகா கந்த சஷ்டி
2025 ஆம் ஆண்டில் மகா கந்த சஷ்டி விழா அக்டோபர் 22 தொடங்கி அக்டோபர் 27 சூரசம்ஹாரம் வரை விரதமும் திருவிழாவும் நடைபெறும்.
ஏழாவது நாள் தெய்வீக திருமணம் என்று சொல்லப்படும் முருகப்பெருமானுக்கும் இந்திரனின் மகளான தேவானைக்கும் திருமணம் நடைபெறும் வரை இந்த திருவிழா நீடிக்கும்.
முருகன் வழிபாடு
பொதுவாகவே கந்த சஷ்டிக்கு 48 நாட்கள் விரதம் 21 நாட்கள் விரதம் ஆறு நாட்கள் விரதம் என்று அவரவர் சௌகரியத்திற்கு ஏற்ப விரதத்தை அனுஷ்டிப்பார்கள்.
இந்நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் முருகப்பெருமான் படத்திற்கு விளக்கேற்றி,
அவருக்கான பாடல்கள் பாடி, கவசங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம். ஆறாவது நாள் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறும் வரை விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடலாம்.