ஸ்கூல் பேக்கில் துப்பாக்கி; வகுப்பறையில் 3வது படிக்கும் மாணவனை சுட்ட 5 வயது சிறுவன்
3 வது மாணவனை 5 வயது சிறுவன் பள்ளியில் வைத்து துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி
பீகார் மாநில, சுபால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நர்சரி படித்து வரும் 5 வயது சிறுவன் தனது பள்ளி பேக்கில் வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்துள்ளான்.
தனது பேக்கில் இருந்த துப்பாக்கியை எடுத்து அதே பள்ளியில் மூன்றாவது வகுப்பு படிக்கும் மாணவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். சுட வேண்டாம் என தடுக்க முயன்ற போது இதில் 3வது படிக்கும் சிறுவனின் கையில் காயம் ஏற்பட்டது.
கைது
உடனே அந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்ட சிறுவனின் தந்தை தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பள்ளி முதல்வரை கைது செய்து துப்பாக்கி எப்படி பள்ளிக்கு வந்தது என விசாரித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பைகளை சோதனையிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பெற்றோர்கள் அச்சத்தில் பள்ளிக்கு ஓடி வந்து பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.