5ஜி செல்போனில் இருந்து வரும் கதிர்வீச்சு; எப்போது அதிகம் வரும் - உயிருக்கே ஆபத்து?
5ஜி செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5ஜி
5ஜி சேவை உலகெங்கும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு 5ஜி சேவையை விரிவுபடுத்தி வருகிறது.
இந்நிலையில், ப்ராஜெக்ட் GOLIAT என்ற குழுவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செல்போனில் இருந்து வரும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு செய்துள்ளனர். கிராமம், நகரம் என நாடு முழுக்க 30 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செல்போன் ஏரோபிளேன் மோடில் இருக்கும் சமயம், டவுன்லோட் செய்யும் போது, அப்லோட் செய்யும் போது என மூன்று சமயங்களிலும் அதன் கதிரியக்க அதிர்வெண் மின்காந்த புலம் (RF-EMF) எந்தளவுக்கு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.
மனிதர்களுக்கு பாதிப்பா?
அதில், ஏரோபிளேன் மோடில் இருக்கும் போது சராசரியாகக் கிராமப்புறங்களில் கதிர்வீச்சு குறைவாக இருக்கிறது. டேட்டோவை டவுன்லோட் செய்யும் கதிர்வீச்சு வெளிப்பாடு அதிகரிக்கிறது. கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களிலேயே அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக அப்லோட் செய்யும் போதே கதிர்வீச்சு அதிகமாக வெளிப்படுகிறது. கிராமங்களில் சிக்னல்களை வெளியிடும் பேஸ் ஸ்டேஷன் அடர்த்தி குறைவாக இருப்பதால் செல்போன் அதிக சக்தியைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இதனால் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள்.
நாம் பொதுவாக செல்போனை மிக அருகே வைத்துப் பயன்படுத்துவோம். அப்போது இந்த அளவீடுகளைக் காட்டிலும் 10 மடங்கு வரை கதிர்வீச்சு அதிகமாக இருக்கலாம். உலக சுகாதார அமைப்பு மற்றும் ICNIRP என்ற அமைப்பு 2,000 mW/m² வரை கதிர்வீச்சு பாதுகாப்பானது என ஆராய்ச்சி குழுவில் இருந்த அட்ரியானா பெர்னாண்டஸ் வேலுடோ கூறியுள்ளார்.