நடு ரோட்டிலேயே 59 வயது முதியவர் கொலை - 8 சிறுமிகள் செய்த கொடூரம்!
59 வயதுடைய முதியவரை 8 சிறுமிகள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதியவர் கொலை
கனடா, டொரோண்டா நகரில் 59 வயதுடைய முதியவரை, 13 முதல் 16 வயதுடைய சிறுமிகள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணையில்,

3 சிறுமிகள் 13 வயதுடையவர்கள் என்றும், 3 சிறுமிகள் 14 வயதுடையவர்கள் என்றும், 2 சிறுமிகள் 16 வயதுடையவர்கள் என்றும் தெரிந்தது. மேலும், அவர்கள் வேறு வேறு பகுதியில் இருந்து வந்தவர்கள். இணையத்தில் அறிமுகமானவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
8 சிறுமிகள் கைது
இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், மாலைப்பொழுதில் அந்தப் பகுதியில் அவர்கள் ஏன் கூடினார்கள் என எங்களுக்குத் தெரியவில்லை. மேலும், அவர்கள் எதற்காக கூடினார்கள் என்றும் தெரியவில்லை.
கத்தியால் குத்துவதற்கு முன் இரு தரப்பிற்கும் இடையே ஏதோ ஒரு கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது என்பது மட்டும் தெரிகிறது” எனக் கூறினர்.
சில ஆயுதங்களும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.