முடியாத மருமகள் - மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்த தாய்!
மகனுக்காக, தாய் பேத்தியை பெற்றெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாடகைத்தாய்
அமெரிக்காவைச் சேர்ந்தவர் நான்சி ஹேக்(56). வெல் டெவலப்பராக இருந்து வருகிறார். இவருக்கு, ஜெஃப் என்ற மகனும், கேம்ப்ரியா என்ற மருமகளும் உள்ளனர்.
இந்நிலையில், மருமகள் கேம்ப்ரியாவால் கருத்தரிக்க முடியாத நிலையில் நான்சியே வாடகைத்தாயாக மாறியுள்ளார். இதனால் கடந்த ஆண்டு ஹன்னா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.
நெகிழ்ச்சி சம்பவம்
தொடர்ந்து, தனது மகன் மற்றும் மருமகள் குழந்தைக்காக ஏங்கியது தனக்கு வருத்தமளித்தது. அவர்கள் மகிழ்ச்சிக்காக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
தற்போது, நான்சி தனது மகன் மற்றும் மருமகளுடன் மகிழ்ச்சியாக உள்ளார்.
மேலும், குடும்பத்துடன் பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்தச் சம்பவம் கவனம் பெற்றுள்ளது.