15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய தாத்தா!! பிறந்த குழந்தை இறந்தது!
கள்ளக்குறிச்சி அருகே தனது சொந்த பேத்தியை கர்ப்பமாக்கிய தாத்தாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்த முனியாண்டி என்பவர் பல ஆண்டுகளாக தனது சொந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இதன் மூலம் அந்த சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை ஒன்று பிறந்து இறந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த 15 வயது சிறுமியின் அம்மா இறந்துவிட்டதாகவும், அப்பா அவரை விட்டு சென்று விட்டதாகவும் தெரியவந்தது.
இதனால் அந்த சிறுமியை அவரது அண்ணனும், தாத்தா பாட்டியும் வளர்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் , வீட்டில் இருக்கும் அந்த சிறுமியிடம் அவரது தாத்தா முனியாண்டி பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதன் மூலம் அந்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டதால் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.
அப்போது அவருக்கு கடந்த 31-ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்து சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளது.
இதனை தொடர்ந்து தாத்தா முனியாண்டியை கைது செய்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.