மகனின் குழந்தையை சுமக்கும் தாய் - ஆசையை நிறைவேற்றிய நெகிழ்ச்சி பின்னணி!
ஒரு தாய் தனது மகனுக்கே வாடகை தாயாக மாறி இருக்கும் நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மனைவியின் நிலை
அமெரிக்காவின் உடாஹ் பகுதியைச் சேர்ந்தவர் நான்சி ஹாவுக்(56). இவருக்கு 32 வயதில் ஜெஃப் எனும் மகன் உள்ளார். ஜெஃப்புக்கு கேம்பிரியா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. ஜெஃப் - கேம்ப்ரியா தம்பதிக்கு முதல் மகப்பேற்றின் போது வேரா மற்றும் அவ்யா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.

தற்போது இந்த இரட்டையர்களுக்கு 3 வயது. இந்நிலையில், அடுத்த இரண்டாண்டுகளில் கேம்ப்ரியா மீண்டும் கர்ப்பமாகி டீசல் மற்றும் லூகா என்ற இரட்டையரை பெற்றெடுத்துள்ளார். தொடர்ந்து, உடல் நலிவுற்ற கேம்ரியாவுக்கு கர்ப்பப்பை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
வாடகைத்தாய்
இந்நிலையில், ஜெஃப், கேம்பரியாவுக்கு மேலும் குழந்தைகள் பெற வேண்டும் என ஆசை இருந்துள்ளது. கேம்ரியாவுக்கு கருப்பை இல்லாததால் கருத்தரிக்க முடியதா நிலை. எனவே, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற இருவரும் முடிவெடுத்துள்ளனர்.

இந்த சூழலில் தான் ஜெஃப்பின் தாய் நான்சி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். தனது மகன், மருமகளுக்காக தானே வாடகைத்தாயாக மாற அவர் முன்வந்துள்ளார். இதை தனது மகன் ஜெஃப்பிடம் கூறிய போது, அவன் அதிர்ச்சி அடைந்ததாக கூறும் நான்சி,
நான் எனது மகனுக்கு எப்படியாவது துணை நிற்க வேண்டும் என்ற இந்த முடிவை எடுத்தேன் என்றார். இந்த முடிவுக்கு தனது கணவர் ஜேசன், அதாவது ஜெஃப்பின் தந்தையும் துணை நின்றதாக நான்சி கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட தன்னலமற்ற தாயை நான் அடைந்ததற்கு நன்றிக்கடன் பெற்றுள்ளேன் என்கிறார் ஜெஃப்.