வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை

PBKS Ipl2021 preity zinta Twinbaby
By Petchi Avudaiappan Nov 18, 2021 04:49 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

வாடகைத்தாய் மூலம் நடிகை பிரத்தி ஜிந்தா ரட்டை குழந்தைகளைப் பெற்றுள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல இந்தி நடிகையான பிரீத்தி ஜிந்தா இந்தியில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான தில்சே படத்தின் தமிழ் மறுஉருவாக்கம் ஆன உயிரே படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயமானார். 

தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தன் நீண்ட கால நண்பரான ஜீன் குட் இனாஃப் என்பவரை லாஸ் ஏஞ்சல்ஸில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட ப்ரீத்தி, சிறப்புத் தோற்றங்களில் மட்டும் நடித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ஜீன் குட் இனாஃப் தம்பதிக்கு இரட்டைய குழந்தை பிறந்துள்ளது. வாடகை தாயின் மூலம் இந்த குழந்தைகளை அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துக் கொள்ளும் விதமாக சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட ப்ரீத்தி, “அனைவருக்கும் வணக்கம், இன்று உங்கள் அனைவருடனும் அற்புதமான செய்தியைப் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

எங்கள் இரட்டையர்களான ஜெய் ஜிந்தா குட் எனாஃப் மற்றும் கியா ஜிந்தா குட் எனாஃப் ஆகியோரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் ஜீனும் நானும் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். எங்கள் இதயங்கள் மிகவும் நன்றியுடனும், மிகுந்த அன்புடனும் நிரம்பியுள்ளன. எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய கட்டத்தில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்த நம்ப முடியாத பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் எங்கள் வாடகை தாயிற்கு மனமார்ந்த நன்றி. அன்புடன் - ஜீன், ப்ரீத்தி, ஜெய் & கியா" என்று கூறியுள்ளார்.