அயோத்தி கோயில்; தங்க தகடுகளில் மின்னும் ராமாயண கதை - தீவிர பக்தர் அர்ப்பணிப்பு!
522 தங்க தகடுகளில் அச்சிடப்பட்ட இராமாயண கதையை அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்க உள்ளதாக பக்தர் தெரிவித்துள்ளார்.
ராமாயண கதை
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது. பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்து கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்தார்.
இதையடுத்து, மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்ட நாள் முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ராம பக்தரான லஷ்மி நாராயணன் என்பவர் இராமாயண கதையை காலம் கடந்தும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ளார்.
பக்தர் அர்ப்பணிப்பு
இதற்காக அவரை தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு தாமரை தட்டில் தங்க முலாம் பூசி ராமாயண கதையின் எழுத்துக்களை பொறிக்க முடிவு செய்துள்ளார். சுமார் ஒரு மில்லி மீட்டர் அளவு தருமன் இருக்கும் இந்த தகட்டின் இருப்பக்கத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
147 கிலோ எடையுள்ள ராமாயண கதையை உள்ளடக்கிய தகடுகளை தயாரிக்க சுமார் 8 மாத காலங்கள் ஆனதாக சொல்லப்படுகிறது.
வரலாறு சிறப்பு மிகுந்த ராமாயணத்தை சுமந்து செல்லும் இந்த தங்க தகடுகள் விரைவில் அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாகவும் ராமநவமி அன்று கோவில் கருவறைக்கு இதை அர்ப்பணிக்க உள்ளதாகவும் ராம பக்தர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.