என்ன லைஃப் சார் இது?50 வயதில் ஒரு குழந்தை - பிரபுதேவா feeling வீடியோ வைரல்!
தனது ஒன்றரை வயது மகள் குறித்து பிரபுதேவா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபுதேவா
இந்திய சினிமாவில் நடனபுயல் என்ற பெயரைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது பிரபுதேவா. 90 களில் காதலன், மின்சார கனவு உள்ளிட்ட பல ஹிட் பட படங்களை கொடுத்தார்.அதன்பிறகு நடனத்துறையிலிருந்த ரமலத்தை1995இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2011 விவாகரத்து செய்தார்.
பின்னர் நயன்தாராவை காதலித்து வந்த பிரபுதேவா அவரிடமிருந்து பிரிந்தார். இந்த நிலையில் 2020இல் திடீரென்று திருமணம் செய்து கொண்டார். இந்த செய்து சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது.தற்பொழுது பிரபுதேவாவுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
தனது மகள் குறித்து பிரபுதேவா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதில் பிரபுதேவா கூறியிருப்பதாவது: எனக்கு இப்படி திருமணம் ஆகும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. என் கை வலியைச் சரி செய்ய பிசியோதெரபியாக வந்த அவர்.என் வாழ்க்கையில் ஒருவராக மாறிவிட்டதாகக் கூறினார்.
தனது மகள்
தொடர்ந்து பேசியவர் 51 வயதில் ஒரு குழந்தைக்குத் அப்பாவாக இருப்பது ஒரு புதுமையான அனுபவம்.அவளுக்கு 15 வயதாகும் போது எனக்கு 65 வயதாகி இருக்கும். தினந்தோறும் என் மகளுடன் விளையாடுகிறேன்.
அவளைக் கொஞ்சுவது வேறு ஒரு அனுபவத்தைக் கொடுப்பதாகக் கூறினார். 40 வயதில் தான் வாழ்க்கை போர் அடிக்கும் எனச் சொல்வார்கள்.. ஆனால் எனக்கு அப்படி இல்லை . நான் சந்தோசமாக உள்ளதாகத் தெரிவித்தார்.