திருமண உதவித்தொகை; 20லிருந்து 50 ஆயிரமாக உயர்வு - அரசு அதிரடி
திருமணங்களுக்கான உதவித்தொகை 20 ஆயிரத்தில் இருந்து ரூ50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
உதவித் தொகை
தாலிக்கு தங்கம் ,திருமண உதவித் தொகை திட்டமானது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்படும்.
அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ 25 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படுகின்றது.
உயர்வு
இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டு கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான இலவசமாக வழங்கப்படும் உதவித்தொகை 20 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இனி தம்பதிகளுக்கு 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, 20 பேருக்கு உணவு, மாலை, புஷ்பம்,பீரோ,மெத்தை,கட்டில், தலையணை, கை கடிகாரம், மிக்ஸி, பூஜைப் பொருட்கள், பாய், பாத்திரங்கள் போன்ற பொருட்களின் செலவினை அறநிலையத் துறையே ஏற்கும் என்று கூறப்பட்டுள்ளது.