ரூ.1000 மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கூடுதலாக 5 ஆயிரம் பெண்கள் சேர்ப்பு!

M K Stalin Tamil nadu
By Vinothini Oct 17, 2023 04:46 AM GMT
Report

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் புதிய பெண் பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உரிமை தொகை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து தற்பொழுது தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 27-ம்தேதி மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இத்திட்டத்தின்கீழ், 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு,

5000-women-included-in-magalir-urimai-thogai

அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000 வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூ. 1065 கோடியே 21 லட்சத்து 98 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் அளிக்கப்பட்டுள்ளது. இவை மாதந்தோறும் 15ம் தேதி வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகள்.. நிற்கவைத்து பனிஷ்மென்ட் கொடுத்த கலெக்டர் - அதிரடி!

கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகள்.. நிற்கவைத்து பனிஷ்மென்ட் கொடுத்த கலெக்டர் - அதிரடி!

கூடுதல் பெண்கள்

இந்நிலையில், அக்டோபர் மாதத்துக்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். உரிமைத்தொகை பெற்றுக் கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும்தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

5000-women-included-in-magalir-urimai-thogai

இந்த அக்டோபர் மாதத்துக்கான 1,06,48,406 மகளிருக்கான ரூ.1064 கோடியே, 84 லட்சத்து 6 ஆயிரம் உரிமைத்தொகை அக்டோபர் 14-ம் தேதி அன்றே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.