ஸ்கரப் டைஃபஸ்; தமிழகத்தில் 5000 பேர் பாதிப்பு - இதெல்லாம் இருந்தா உடனே டாக்டரை பாருங்க
ஸ்கரப் டைபஸ் தொற்றால் தமிழகத்தில் 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்கரப் டைபஸ்
ஸ்கரப் டைபஸ் என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது இந்த நோய் ஏற்படுகிறது.
இந்த தொற்றால் 2024 முதல் தற்போது வரை 5,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 10 முதல் 20 பேர் தொற்று பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
5000 பேர் பாதிப்பு
தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தொற்று பரவி வருகிறது. மேலும், கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பாதிப்புகள் காணப்படுகின்றன.
இது பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி, தலை வலி, குறிப்பாக கருப்பு காயங்கள் உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும். விவசாய தொழிலில் ஈடுபடும் நபர்கள், புதர் பகுதிகள் நிறைந்த இடத்தில் வசிக்கும் நபர்கள், காடுகளில் சுற்றுபவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு இது பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.
எனவே, சாதாரண சளி, காய்ச்சல், பூச்சி கடி ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அணுகி, முறையான சிகிச்சை பெற வேண்டும்.