பஸ் ஸ்லீப்பரில் மூட்டை பூச்சியால் நடந்த சம்பவம் - தம்பதிக்கு ரூ.1.29 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
மூட்டை பூச்சி தொல்லையால் பயணிக்கு ரூ.1.29 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூட்டை பூச்சி தொல்லை
கர்நாடகா, மங்களூருவிலிருந்து பெங்களூருவுக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அதில் தீபிகா என்பவர் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்துள்ளார்.
முன்னதாக தீபிகாவும் அவரது கணவர் சோபராஜ் என்பவரும் தனியார் மொபைல் ஆப்-ல் டிக்கெட் புக் செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது இருக்கையில் இருந்த மூட்டை பூச்சிகள் தீபிகாவை கடித்துள்ளன.
தம்பதிக்கு நஷ்ட ஈடு
இதனால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் செல்ல இருந்த ராஜா ராணி நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த தீபிகா நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் பஸ் நடத்துனர், பேருந்தை பட்டியலில் சேர்த்த ஆப் ஆகியோர் குற்றவாளிகள் என்று கூறியுள்ளது. மேலும், அபராதமாக ரூ. 18,650, டிக்கெட் கட்டணம் ரூ. 850, வழக்கு தொடர்ந்ததற்கான செலவு உள்பட மொத்தம் ரூ. 1.29 லட்சத்தை தீபிகாவிற்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.