பிரபல 2 ரூபாய் சிப்ஸ் பாக்கெட்டில் 500 ரூபா நோட்டு - உடனே வாங்கி குவிக்கும் மக்கள்!
சிப்ஸ் பாக்கெட்டில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிப்ஸ் பாக்கெட்டுகள்
கர்நாடகா, குன்னூர் கிராமத்தில் முன்னணி நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்க மக்கள் அலைமோதி வருகின்றனர். காரணம் என்னவென்றால் சில தினங்களுக்கு முன் சிப்ஸ் பாக்கெட்டுகள் வாங்கிய சிலருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.
அந்த பாக்கெட்டுகளில் சிப்ஸ் தவிர, 500 ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளது. மேலும், ஒரு பாக்கெட்டுகளில் ரூ.500 முதல் ரூ.3000 வரை இருந்துள்ளது. ஆக மொத்தம் சிப்ஸ் பாக்கெட்டுகளில் ரூ.20 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இன்ப அதிர்ச்சி
இதனை அறிந்த மக்கள் முண்டியிட்டு கடைக்கு ஓட்டம் எடுத்தனர். ஆனால் அதன்பிறகு அப்படி எந்த இன்ப அதிர்ச்சியும் கிடைக்கவில்லை. முதலில் சிப்ஸ் பாக்கெட்டுகளில் இருந்தது போலி நோட்டுகள் என கூறப்பட்ட நிலையில்,
அவை ஒரிஜினல் நோட்டுகள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனம் விளம்பரத்திற்காக இதனை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.