புழக்கத்தில் 500 ரூபாய் நோட்டு - மத்திய அரசு பகீர் எச்சரிக்கை
புதிய 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
500 ரூபாய் கள்ள நோட்டு
ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக கண்டறிந்து மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசல் ரூ.500 நோட்டிற்கு கொஞ்சமும் குறையாமல் உள்ள கள்ள நோட்டில் ஒரு எழுத்து மாறி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கள்ள நோட்டுகளில் “RESERVE BANK OF INDIA” என்ற சொற்றொடரில் “RESERVE” இல் உள்ள “E” என்ற எழுத்து தவறுதலாக “A” என்ற எழுத்து அச்சிடப்பட்டுள்ளது.
அமைச்சகம் எச்சரிக்கை
வங்கிகள், செபி போன்ற மத்திய அரசின் ஏஜென்சிகள் இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களை கண்டுபிடிக்க என்ஐஏ போன்ற அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.