தமிழ் யூடியூபருக்கு 50 லட்ச fine போட்ட நீதிமன்றம்..! அதிரவைக்கும் செய்தி..! பின்னணியில் அதிமுக.?
திருநங்கையும், அதிமுக செய்தி தொடர்பாளருமான அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ் யூடியூபருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைக்கேல் பிரவீன்
தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை அடங்கிய வீடியோக்களை பரப்பியதாக, அதிமுக செய்தி தொடர்பாளரான திருநங்கை அப்சரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
மைக்கேல் பிரவீன் வெளியிட்ட அவதூறு கருத்துகளால் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அப்சரா ரெட்டி புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
50 லட்சம் fine
அதன்படி, யூடியூபில் கருத்துகளை வெளியிட உரிமை உள்ளது என்றாலும் தனிப்பட்ட நபரின் உரிமையில் தலையிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், அப்சராவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். முன்னதாக, அப்சரா ரெட்டிக்கு எதிரான வீடியோக்களை யூடியூபில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.