உலகின் சிறந்த காலை உணவுகளின் பட்டியல் - இடம்பிடித்த 3 இந்திய உணவுகள்
உலகின் சிறந்த 50 காலை உணவுகளின் பட்டியலில் இந்திய உணவுகள் இடம்பிடித்துள்ளது.
சிறந்த காலை உணவுகள்
சர்வதேச உணவு இதழான TasteAtlas உலகின் சிறந்த காலை உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஜூன் 2025 வரை சேகரிக்கப்பட்ட வாக்குகள் மற்றும் மதிப்புரைகளின் அடிப்படையில் இந்த தரவரிசை அமைந்துள்ளது.
இதில் மூன்று இந்திய உணவுகள் இடம்பெற்று சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. மகாராஷ்டிராவிலிருந்து, மிசல் பாவ் 18வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியர்கள் விரும்பி உண்ணும் பராத்தா இந்த பட்டியலில் 23 வது இடத்தில் உள்ளது.
இந்திய உணவுகள்
வட இந்தியாவில் காலை உணவாக மட்டுமின்றி மதியம் மற்றும் இரவு உணவாகவும் பராத்தா உண்ணப்படுகிறது. சோலே பதுரே 32 வது இடத்தில் உள்ளது. சோலே - ஒரு காரமான சுண்டல் கறி மற்றும் பதுரே - மைதா மாவால் தயாரிக்கப்படும் ஒரு வகை பூரி.
இது பொதுவாக வெங்காயம், ஊறுகாய், புதினா சட்னி மற்றும் குளிர்ந்த லஸ்ஸியுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. மேலும், நிஹாரி, ஸ்ரீகண்ட் மற்றும் பாலக் பனீர் உள்ளிட்ட பல இந்திய உணவு வகைகள் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் இட்லி இல்லாதது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.