உணவு டெலிவரியில் களமிறங்கும் ரேபிடோ - கமிஷன் கிடையாதாம்..
ரேபிடோ நிறுவனம் உணவு டெலிவரி சேவையையும் வழங்கவுள்ளது.
ரேபிடோ நிறுவனம்
பைக் டேக்சி சேவைக்கு பிரபலமான நிறுவனம் ரேபிடோ. தற்போது உணவு டெலிவரி சேவையிலும் களம் இறங்கவுள்ளது. இதற்காக OWNLY என்ற செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நடப்பு மாத இறுதி அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் பெங்களூருவில் இந்த சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையில் உணவு நிறுவனங்களிடமிருந்து கமிஷனாக எதுவும் வாங்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவு டெலிவரி
அதற்கு பதிலாக உணவின் விலைக்கு ஏற்ப உணவகங்களிடம் இருந்து டெலிவரி கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி 100 ரூபாய்க்கும் குறைவான உணவை வாங்கினால் டெலிவரி கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் 20 ரூபாயும், உணவகங்களிடம் 10 ரூபாயும் வசூலிக்கப்படும்.
100 ரூபாய்க்கு மேல் உணவு வாங்கினால் 25 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொமேட்டோ, சுவிக்கி சேவையில் 20 முதல் 30 சதவீதம் கமிஷன் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Ethirneechal: சூழ்ச்சியில் குணசேகரனையே தோற்கடித்த வீட்டு பெண்கள்... கதையில் எதிர்பாராத திருப்பம் Manithan

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
