செம்ம நியூஸ்.. அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இனி 50-50 work from home ஆப்ஷன்!

Government Employee Delhi India
By Swetha Nov 20, 2024 11:00 AM GMT
Report

காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிப்பதால் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ஊழியர்கள்

அதிக மாசடையும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அந்த வகையில் அதிக காற்று மாசுப்பாடு அடைந்த நகரமாக டெல்லி மாறியுள்ளது.

செம்ம நியூஸ்.. அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இனி 50-50 work from home ஆப்ஷன்! | 50 50 Work From Home For Government Employee Delhi

மக்களை இயல்பு வாழக்கையை முடக்கிப்போடும் அளவுக்கு காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் பனிமூட்டம் போல மாசு புகை சூழ்ந்ததால் ஆங்காங்கே விபத்து ஏற்பட்டு வருகிறது.

முன்னதாக நடத்திய ஆய்வு ஒன்றில் டெல்லி காற்றின் தரம் 978 என்ற மோசமான நிலையில் உள்ளது. இது ஒரு நாளைக்கு சுமார் 40 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் தெரியாதா? அரசு ஊழியர் ஆகவே முடியாது - உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

தமிழ் தெரியாதா? அரசு ஊழியர் ஆகவே முடியாது - உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

அறிவிப்பு 

இந்நிலையில் தான் டெல்லியில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் கோபால் ராய் பகிர்ந்திருக்கிறார்.

செம்ம நியூஸ்.. அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இனி 50-50 work from home ஆப்ஷன்! | 50 50 Work From Home For Government Employee Delhi

அதில், டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவை குறைக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்தும் வகையில் இன்று (நவம்பர் 20) பிற்பகல் 1 மணிக்கு தலைமை செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடு ஒருபுறம் என்றால், பனிமூட்டம் மறுபுறம் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. வாகன ஓட்டிகள் அவதியுறும் நிலை காணப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக டெல்லியில்,

119 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 6 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லிக்கு வர வேண்டிய 13 ரயில் சேவையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.