2026-ல் கோடீஸ்வரராகும் 5 ராசிகள் - பாபா வாங்கா கணிப்பு!

Astrology Baba Vanga
By Sumathi Nov 12, 2025 06:45 AM GMT
Report

2026 ஆம் ஆண்டில் 5 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபா வங்கா கணித்த பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன.

baba vanga 2026 prediction

அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சில சம்பவங்கள் நடைபெறும் என கணித்துள்ளார். அதில் 2026 ஆம் ஆண்டில் 5 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். 

ரிஷபம்

புதிய ஆண்டில் நல்ல செல்வத்தையும் வெற்றியையும் பெறுவார்கள். மேலும் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும் வாய்ப்புள்ளது. அதோடு வங்கி இருப்பில் பெரிய அளவில் உயர்வு ஏற்படும். 

கன்னி

தொழிலில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். அதோடு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள் மற்றும் இவர்களால் நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும்.  

150 வயசு வரை வாழலாம்..ஆயுளை நீட்டிக்கும் சீன மாத்திரை!

150 வயசு வரை வாழலாம்..ஆயுளை நீட்டிக்கும் சீன மாத்திரை!

விருச்சிகம்

வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் இவர்களை தேடி எதிர்பாராத அளவில் பண தேடி வரக்கூடும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவதோடு, அதை விரிவாக்கும் செய்யும் வாய்ப்புக்களையும் பெறுவார்கள்.

சிம்மம்

சனியின் செல்வாக்கு குறைந்து, அந்த விளைவாக பல பிரச்சனைகளை திறம்பட சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். நிதி நிலையில் பெருமளவில் உயர்வைக் காண்பார்கள். அரசியலில் இருந்தால், நல்ல பதவியைப் பெறும் வாய்ப்புள்ளது.  

மகரம்

புதிய உச்சங்களைத் தொடுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இந்த ஆண்டில் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.