பிரிட்ஜை திறந்து தின்பண்டம் எடுத்த 5வயது சிறுமி - துடிதுடித்து உயிரிழந்த கொடூரம்!
5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்ஜை திறந்து..
சென்னை ஆவடி நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் கவுதம்- பிரியா தம்பதி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களது மூத்த மகள் தான் ரூபாவதி (5). அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், மாலை நேரத்தில் சிறுமி தனது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு சிறுமி ரூபாவதி மீது மின்சாரம் கடுமையாக பாய்ந்துள்ளது.
உயிரிழந்த கொடூரம்
அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், குழந்தையை தூக்கிக் கொண்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ரூபாவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏனினும் குளிர்சாதன பெட்டியை திறந்த போது மின்சாரம் தாக்கி 5 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.