பிரிட்ஜின் பின்னால் ஒளிந்த குழந்தை- மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சோகம்
திருவனந்தபுரத்தில் குளிர்சாதன பெட்டியின் பின்னால் ஒளிந்துக் கொண்ட குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குரவிலங்காடு பகுதியை சேர்ந்த தம்பதி அலல் – சுருதி. இவர்களது ஒன்றரை வயது குழந்தை ரூத் மரியம், நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, ஒளிந்து கொள்வதற்காக வீட்டில் இருந்த பிரிட்ஜின் பின்னால் சென்றுள்ளார். பிரிட்ஜின் பின்னால் இருக்கும் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு இருந்ததை அறியாத பெற்றோர் குழந்தை அங்கு சென்றதை கவனிக்கவில்லை.
பிரிட்ஜின் ஒயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.