ரயிலின் சக்கரங்களுக்கு நடுவே - உயிரை கையில் பிடித்து - 100 கி.மீ பயணித்த 5 வயது சிறுவன்!!
சரக்கு ரயிலின் சக்கரத்திற்கு மத்தியில் அமர்ந்து சிறுவன் ஒருவன் 100 கிலோமீட்டர் பயணம் செய்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரக்கு ரயிலின்...
இந்த அதிர்ச்சி சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) அன்று நிகழ்ந்துள்ளது. ரயில் தண்டவாளங்களுக்கு அருகே வசிக்கும் 5 வயதே ஆன குழந்தை சரக்கு ரயிலில் விளையாடிக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
சட்டென அப்போது ரயில் நகரத் தொடங்கிய நிலையில், இறங்க வழி தெரியாமல் சுமார் 100 கிமீ தூரம் அச்சிறுவன் பயணித்துள்ளான்.
சரக்கு ரயிலின் சக்கரங்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த அச்சிறுவன், 100 கி.மீ தூரம் தாண்டி இறுதியாக ஹர்டோ என்ற இடத்தில் இரயில்வே பாதுகாப்புப் படையினரால் (RPF) மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்படும் போது, அச்சிறுவன் எரியும் வெயிலில் , ரயிலின் சக்கரங்களுக்கு இடையில் மிகவும் அசௌகரியமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அச்சிறுவன், ஹர்டோயில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
VIDEO: Helpless Kid Travels Over 100 Kms While Sitting Between Tyres Of Goods Train; Rescued By RPF#India #Railway #RPF #Kid @RPF_INDIA @upgrp_grp @hardoipolice @dmhardoi pic.twitter.com/srf4n3lpNm
— Free Press Journal (@fpjindia) April 22, 2024