முன்ஜென்மம் பற்றி 5 வயது சிறுவன் கூறிய அதிர்ச்சி தகவல் - மிரண்டு போன தாய்!
தனது தாயின் முன்ஜென்மம் பற்றி 5 வயது சிறுவன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்ஜென்மம்
உலகம் முழுவதும் விசித்திரமான மற்றும் வினோதமான சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.அதில் சில சம்பவங்கள் ஆச்சரியத்தை ஏற்படும்.அப்படி, தனது தாயின் முன்ஜென்மம் பற்றி 5 வயது சிறுவன் கூறியுள்ளார். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கோஸ்ட் இன்சைட் மை சைல்ட் என்ற டிவி ஷோவில் லூக்கின் என்ற சிறுவனும் அவரது தாய் கலந்து கொண்டனர். அப்போது சிறுவன் தன்னை பாம் என்ற பெயரை வைத்து அடிக்கடி அழைத்தார்.இது குறித்துக் கேட்ட போது தன்னுடைய முன்ஜென்மத்தில் என்னுடைய பெயர் பாம் என்று கூறினார்.
5 வயது சிறுவன்
மேலும் தான் 1993-ஆம் ஆண்டு சிகாகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்ததாகக் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தான் இது உண்மைதானா என்று அறிய இணையத்தில் தேடினேன். அப்போது 1993-ஆம் ஆண்டு சிகாகோவில் உள்ள பாக்ஸ்டன் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
19 பேர் உயிரிழந்ததில் பாம் ராபின்சன் என்ற பெண்ணும் ஒருவர். இந்த பெண் தீ விபத்திலிருந்து தப்பிக்க நினைத்துக் கட்டிடத்தின் ஜன்னல் வழியே வெளியே குதித்த போது உயிர் இழந்துள்ளார் . இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக அந்த நிகழ்ச்சியில் சிறுவனின் தாய் கூறினார்.