கணவரை இழந்த 30 வயது பெண்.. பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் உட்பட 5 பேர் - கொடூரம்!
சிறுவன் உட்பட 5 பேர் சேர்ந்து பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவரை இழந்த பெண்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பெண் வேலை செய்து வருகிறார். இவர் தனது கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கும், கீழப்பசலையைச் சேர்ந்த 22 வயதான ஆதித்யா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பெண் குறித்து இவர் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்களும் ஆதித்யா இருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (21), கஜேந்திரன் (19), அருண்குமார் (22) மற்றும் 16 வயது சிறுவர்.
பாலியல் வன்கொடுமை
இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த ஒடிசா பெண் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த நேரம் பார்த்து இந்த 5 பேரும் அவரது வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை சீரழித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அந்த புகாரின் பேரில் மானாமதுரை டிஎஸ்பி கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த ஆதித்யா, ரஞ்சித், கஜேந்திரன், அருண்குமார் மற்றும் சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.