5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவு- அப்போ தமிழகத்தில்?
5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
புதிய ஆளுநர்
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டில் உள்ள அனைத்து மாநில ஆளுநர்களை மாற்றி அமைப்பதும், அல்லது புதியதாக நியமித்தும் உத்தரவிடுவார். அந்த வகையில்,5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக பீகார் மாநில ஆளுநராகப் பதவி வகித்தார்.பிகார் மாநில ஆளுநராக ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கேரளா மாநில ஆளுநராக இருந்தவர்.
மிசோரம் மாநில ஆளுநராக முன்னாள் ராணுவ தளபதி விஜய் குமார் சிங் (வி.கே.சிங் - ஓய்வு) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மணிப்பூர் மாநில ஆளுநராக அஜய் குமார் பல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர்
மேலும், ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸின் ராஜினாமா கடிதத்தைக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அம்மாநில ஆளுநராக டாக்டர் ஹரிபாபு கம்பம்படி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் தமிழகத்தில் ஆளுநர் ரவியின் பதவிக்காலம் முடிந்த பிறகும் பதவியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.