அமைச்சர்கள் இனி இங்கு இருக்கக்கூடாது - முதல்வர் ஸ்டாலின் அதிரடி
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.
5 தீர்மானங்கள்
திமுக சார்பில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் உள்ளிட்ட 76 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில், 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கும், மறைந்த போப் பிரான்சிஸுக்கும் இரங்கல் தீர்மானம். திமுக அரசு 5வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்று இந்தியாவிற்கே ரோல் மாடலாக செயல்படுவதாக குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி தீர்மானம்.
முதல்வர் அறிவுரை
சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்திட தீர்மானம். பொதுக்குழு கூட்டம் மதுரையில் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது என்ற தீர்மானம். அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை கொண்டு மத்திய அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது என மத்திய பாஜக அரசின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீர்மானம்.
மேலும், கடந்த 7 ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். வெற்றிக்குக் காரணம் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் என்றும், இனி அமைச்சர்கள், சென்னையில் இருப்பதை விட அவரவர் மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிட வேண்டும் என்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாக மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.