சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய 5 வீரர்கள்..!
இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. சென்ற ஆண்டு சாம்பின் பட்டம் வென்ற இந்த அணியால் இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியவில்லை.
இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏராளமான குழப்பங்களால் இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் இந்த அணி சரியாக விளையாடததற்கு காரணமும் கூட. ஐபிஎல் போட்டியின் தொடக்கத்திலேயே பந்துவீச்சாளர் தீபக் சஹருக்கு காயம் ஏற்படவே அவர் அணியில் இருந்து விலகினார்.
அதை தொடர்ந்து கேப்டனாக இருந்து வந்த தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர் தோல்விகளை அடுத்து தனது கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார் ரவீந்திர ஜடேஜா.
மோசமான பீல்டிங் மற்றும் பேட்ஸ்மேன்களின் தவறான பேட்டிங் அணுகுமுறை ஆகியவை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை என ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடியது. இதில் 10 போட்டிகளில் தோல்வியை தழுவியது.புள்ளி பட்டியலில் 9 வது இடத்திற்கும் தள்ளப்பட்டது.
கிறிஸ் ஜோர்டான்
பந்துவீச்சாளர் தீபக் சஹர் காயத்தால் வெளியேறிய நிலையில் கிறிஸ் ஜோர்டான் அவருக்கு பதில் 3.60 கோடிக்கு வாங்கப்பட்டார்.
இவர் சென்னை அணிக்காக வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். நான்கு போட்டிகளிலும் இவர் மோசமான எக்கனாமியில் பந்துவீசி ரன்களை வாரி வழங்கினார்.
குஜராத்திற்கு எதிரான கடைசி போட்டியில் ஒரே ஓவரில் 25 ரன்களை வாரி வழங்கினார். மோசமான பந்துவீச்சால் ரன்களை வாரி குவித்த இவரை அடுத்து போட்டியில் எடுக்காமல் இருப்பது நல்லது.
ராபின் உத்தப்பா
சென்னை அணியின் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 3 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது சென்னை அணி நிர்வாகம்.
சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் 115 ரன்கள் குவித்து கோப்பையை வெல்ல காரணமானதால் இந்த ஆண்டு மீண்டும் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடததால் அவரை சென்னை அணி நிர்வாகம் கழட்டி விட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆடம் மில்னே
ரூ.1.90 கோடிக்கு வாங்கப்பட்ட நியூசிலாந்தைச் சேர்ந்த ஆடம் மில்னே காயம் காரணமாக ஒரு போட்டியில் விளையாடிய நிலையில் தொடரில் இருந்து விலகினார்.
இவருக்கு பதிலாக முகேஷ் சவுத்ரி மற்றும் சிமர்ஜித் ஆகிய இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.இவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக சென்னை அணி வாங்குவது கடினம்.
அம்பத்தி ராயுடு
சென்னை அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் அம்பத்தி ராயுடு.இவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக இவரை சென்னை அணி நிர்வாகம் 6.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
13 போட்டிகளில் விளையாடிய அம்பத்தி ராயுடு மோசமாக விளையாடி 274 ரன்களை மட்டுமே எடுத்தார். இதையடுத்து இவரின் மோசமான ஆட்டம் குறித்து அணி நிர்வாகம் கேள்வி எழுப்பியதால் அதிருப்தி அடைந்த அவர் ஓய்வு பெற போவதாக ட்வீட் செய்த நிலையில் பின்னர் அதை நீக்கினார்.
அணி நிர்வாகத்திற்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் இவரை அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு வாங்குது சந்தேகம் என கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துஷார் தேஷ்பாண்டே
சென்னை அணியில் இந்த ஆண்டு 20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட துஷார் தேஷ்பாண்டே இரண்டு போட்டிகளில் விளையாடி 1 விக்கெட் மட்டுமே எடுத்தார்.
2 போட்டிகளில் இவர் 63 ரன்களை தாராளமாக வாரி வழங்கியுள்ளார்.இதனால் இவரை அடுத்த ஆண்டு சென்னை அணி நிர்வாகம் வாங்குவது சந்தேகம் தான்.
மத்தளம் அட்ரா டேய்..இரண்டே நாளில் 100 கோடி வசூல் - விக்ரம் பட குழு ஹேப்பி..!