கோரவிபத்து; வீடு திரும்பிய குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்- குழந்தை உள்பட 5 பேர் பலி!
காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
கோரவிபத்து
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் இந்த விபத்து நடந்துள்ளது. அதே ஊரை சேர்ந்த கனகவேல் என்பவர் தனது மனைவி கிருஷ்ணகுமாரி மற்றும் குழந்தைகளுடன் தளவாய்புரத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு தரிசனம் செய்து முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கொய்யாப்பழ வியாபாரியான பாண்டிஅந்த நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.
5 பேர் பலி
வந்த வேகத்தில் பைக் மீது மோதிய கார் அருகில் இருந்த சுவரில் இடித்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த தகவலறிந்து உடனடியாக வந்த திருமங்கலம் போலீசார் அனைவரின் உடலையும் மீட்டு அங்கிருந்த அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.