சேலம் அருகே கோர விபத்து - குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு

Accident Salem
By Karthikraja Jun 13, 2024 05:10 AM GMT
Report

சேலம் அருகே தனியார் பேருந்து இரு சக்கர வாகனங்களின் மீது விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனது மனைவி வேதவள்ளியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற லாரியின் ஓட்டுநர் வேகத்தடை இருந்ததால் தனது வேகத்தை குறைத்துள்ளது. 

salem accident

இரு சக்கர வாகனத்தில் லாரியின் பின்புறம் நின்றதாக கூறப்படும் நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி உள்ளது. இதில் மூன்று வயது குழந்தை உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். 

நெஞ்சை உலுக்கிய கோர விபத்து; அடுத்தடுத்து பயங்கரம் - 9 பேர் பலி!

நெஞ்சை உலுக்கிய கோர விபத்து; அடுத்தடுத்து பயங்கரம் - 9 பேர் பலி!

ஓட்டுநர் கைது

இந்த விபத்தில் வேதவள்ளியின் கணவர் லட்சுமணன் பலத்த காயங்களுடன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேருந்தில் பயணம் செய்த 10ற்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக வீராணம் காவல் நிலைய போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சேலம் சுக்கம்பட்டியில் 5 பேர் இறந்த விபத்து தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் இரங்கல்

விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணம் அளித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்