காளான் சமைத்து சாப்பிட்ட 5 பேர்; இறுதியில் நேர்ந்த கதி - என்ன காரணம்?

Mushroom Thiruvallur
By Sumathi Oct 22, 2024 05:34 AM GMT
Report

மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட 5 பேர் உடல்நிலை பாதித்துள்ளனர்.

மழை காளான்

திருவள்ளூர், புட்லூர் கோ-ஆப் டெக்ஸ் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி(46). இவர் தனது வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் முளைத்த காளான்களை பறித்துச் சமைத்துச் சாப்பிட்டுள்ளார்.

காளான் சமைத்து சாப்பிட்ட 5 பேர்; இறுதியில் நேர்ந்த கதி - என்ன காரணம்? | 5 People Ate Mushrooms Sprouted In The Rain

மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி (45), அலமேலு (31), வெங்கடேஷ் (23), சரண்யா (14) ஆகியோரும் அந்த காளானை சாப்பிட்டுள்ளனர்.

5 பேர் பாதிப்பு

இந்நிலையில் அதனை சாப்பிட்ட சில மணி நேரத்தில் 5 பேருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை உறவினர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஹனிமூன் சென்ற இடத்தில் குதிரை சவாரி செய்த புதுமாப்பிள்ளை - பரிதாப பலி!

ஹனிமூன் சென்ற இடத்தில் குதிரை சவாரி செய்த புதுமாப்பிள்ளை - பரிதாப பலி!

அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.