கொட்டித்தீர்த்த கனமழை; அறுந்து தொங்கிய மின்சார வயர் - பலியான தம்பதி!
மின்சார வயர் உரசி தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலத்த காற்று
மதுரை, டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த தம்பதி முருகேசன் - பாப்பாத்தி. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடையை பூட்டிவிட்டு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பலத்த காற்று வீசியதால் அப்பகுதியில் மின்சார வயர் அறுந்து விழுந்துள்ளது.
தம்பதி பலி
அப்போது இருட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த அவர்கள் மீது சாலையின் நடுவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மின்வயர் பட்டு மின்சாரம் பாய்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கீழே விழுந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடனே தகவலறிந்து விரைந்த போலீஸார் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.