5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு - உடலை புதைத்த குழியில் நிர்வாணமாக இறங்கிய கணவன்!
மனைவியின் உடலை புதைத்து, குழியில் கணவன் இறங்கி பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணி உயிரிழப்பு
திருப்பத்தூர், சின்ன பசிலிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாதேசிங்கு. இவரது மனைவி பூர்ணிமா(25). கடந்த 4 வருடங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது 5 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.
இந்நிலையில், மாட்டு கொட்டகையை பூர்ணிமா வாட்டர் சர்வீஸ் செய்யும் கருவியை வைத்து சுத்தம் செய்துள்ளார். அப்போது திடீரென அதிலிருந்து மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணவன் செயல்
அதனையடுத்து அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, உறவினர்கள் முன் இறுதிச் சடங்கு ஏற்பாடு நடைபெற்றது. அதற்காக குழி தோண்டியதில், அவரது கணவர் திடீரென குழி முழுவதும் உப்பை எடுத்து கொட்டினார்.
பிறகு, அதில் நிர்வாணமாக குதித்து பூஜை செய்யத் தொடங்கினார். இதுகுறித்து ஊர் மக்கள் கூறும்போது, சில வருஷங்களுக்கு முன்பு, இவர் சாமியார் போல் மாறியுள்ளார். அப்போது தன்னை ஒரு சிவபக்தர் என்று சொல்லி வந்தாராம்.
அதனால்தான், மனைவியின் உடலை புதைக்கும்போது, குழியில் இறங்கி தன்னை அகோரி போல நினைத்து பூஜை செய்துள்ளார் எனத் தெரிவித்தனர்.