தியேட்டரில் படம் பார்த்து சிரித்த இளைஞர்கள் - மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்கள்

Viral Video Mumbai
By Karthikraja Mar 03, 2025 03:06 PM GMT
Report

 தியேட்டரில் சிரித்த ரசிகர்களை மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாவா திரைப்படம்

சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்கை வரலாற்றை சித்தரிக்கும் சாவா என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது வருகிறது. 

chhaava movie

இந்த படத்தில் விக்கி கவுசல், ரஷ்மிகா மந்தனா உள்ளிடோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் காதலை பிரித்த வில்லன் நடிகர் - ஆத்திரத்தில் திரையரங்கில் வைத்து அறைந்த பெண்

படத்தில் காதலை பிரித்த வில்லன் நடிகர் - ஆத்திரத்தில் திரையரங்கில் வைத்து அறைந்த பெண்

சிரித்த இளைஞர்கள்

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள பாலாஜி மூவி பிளக்ஸ் தியேட்டரில் சாவா திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தின் இறுதிக் காட்சியில், சாம்பாஜி மகாராஜாவை முகலாய பேரரசர் ஔவுரங்கசீப் கொடுமைப்படுத்தும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. 

chhaava movie mumbai theatre

அப்போது திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்த 5 இளைஞர்கள், அந்த காட்சியை பார்த்து சிரித்து கிண்டல் செய்துள்ளனர். இந்த செயல் அங்கு படம் பார்த்து கொண்டிருந்த மற்ற ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து அந்த 5 இளைஞர்களையும் உடனடியாக மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். மேலும், அதை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.