குழந்தை பெற்றால் ரூ.5.65 லட்சம் வழங்கும் நிறுவனம் - ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Government of China China
By Vinothini Jul 01, 2023 06:28 AM GMT
Report

சீனாவில் குழந்தை பெற்றால் ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று தனியார் நிறுவனம் ஒன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசு திட்டம்

சீனாவில் தற்போது முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அதனால் 'ஒரு குடும்பம், 3 குழந்தைகள்' என்ற திட்டத்தை சீன அரசு அறிமுகம் செய்தது. இதனால் குழந்தை பிறப்பு அதிகரிக்கும் வகையில் அரசு அறிமுகம் செய்து வைத்து.

5-lakh-incentive-for-having-a-child-in-china

மேலும், இதற்காக அந்நாட்டு அரசு பல சலுகைகள் வழங்கி வருகின்றனர். சீன அரசின் அறிவுறுத்தலின்படி தனியார் நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்து வருகின்றன.

தனியார் நிறுவனம்

இனிநிலையில், சீனாவின் ஷாங்காய் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் 'டிரிப் டாட் காம் குரூப் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் செயல் தலைவர் ஜேம்ஸ் லியாங் என்பவர் கூறுகையில், "எங்கள் நிறுவன ஊழியர்களின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் ரூ.1.13 லட்சத்தை ஊக்கத் தொகையாக வழங்குவோம்.

5-lakh-incentive-for-having-a-child-in-china

குழந்தை பிறந்தது முதல் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு குழந்தைக்கு ஊக்கத் தொகையை அளிப்போம். ஒட்டுமொத்தமாக ஒரு குழந்தைக்கு ரூ.5.65 லட்சத்தை ஊக்கத் தொகையாக வழங்குவோம்.

ஒரு ஊழியர் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அத்தனை குழந்தைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஊக்கத்தொகையை வழங்குவோம்" என்று கூறியுள்ளார்.