பிரபல 5 இந்திய உணவுகளுக்கு வெளிநாடுகளில் தடை - பின்னணி!
இந்தியாவில் பிரபலமான 5 உணவுகளுக்கு மற்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல உணவு
இந்தியாவில் பெரிதும் உபயோகத்தில் உள்ள சமோசா, கெட்ச் அப், நெய், ச்யவன்பிரஷ் மற்றும் சூயிங்கம் போன்ற உணவுகளுக்கு மற்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் அமைந்துள்ள சோமாலியாவில், 2011 முதல் சமோசா சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறுவது கடுமையான தண்டனை வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேற்கத்திய உணவாக இருப்பதால் தடை செய்யப்பட்டுள்ளதாம். பிரான்சில், கெட்ச்அப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார காரணங்களுக்காக பள்ளி சிற்றுண்டிச்சாலைகளில் அதன் பயன்பாட்டை தடை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை
அமெரிக்காவில் நெய் தடை செய்யப்பட்ட பொருளாகும். இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களை ஏற்படுத்தும் என தடைசெய்யப்பட்டுள்ளது. கனடாவில் ச்யவன்பிரஷ் 2005 முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

அதிக அளவு ஈயம் மற்றும் பாதரசம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தூய்மையைப் பராமரிக்க கடுமையான வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்ததால் சூயிங்கம் விற்பனைக்கு தடைவிதித்தது. சர்வதேச அழுத்தத்தின் காரணமாக, 2004 ஆம் ஆண்டில், மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
