மக்களே உஷார்..தயிரோடு இந்த 5 உணவுகளை மறந்துகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
தயிரோடு சில உணவுகளை சாப்பிட்டால் என்ன பிரச்சனை ஏற்படும் என தெரிந்துகொள்ளுங்கள்.
5 உணவுகள்
நமது உணவுமுறையில் தயிர் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. மதிய வேலையில், பலர் தயிரை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஏனெனில் அது வயிற்றுக்கு நிவாரணம் தருகிறது. நல்ல வயிறு நிரம்ப சாப்பிட்டதற்கு பிறகு தயிர் சாப்பிட்டால் செரிமானத்திற்கு உதவுகிறது.சில நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கவும் செய்கிறது.
ஆனால், சில உணவுப் பொருட்களை தயிருடன் சேர்த்து உண்ணுவதால் அது விஷமாக மாறிவிடும் தன்மை உண்டாகிறது. அந்தவகையில், தயிருடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி, செரிமானம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மீன்
தயிரோடு மீன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் அசௌகரியம் ஏற்படும். இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்திடும் போது, உடலின் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு அஜீரனம் மற்றும் பிற செரிமானப் பிரச்சனைகள் வரக்கூடும் என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.
மீனுக்கும் தயிருக்கும் வெவ்வேறான செரிமான நடைமுறை உள்ளது. இவை இரண்டும் உடலில் ஒன்றாக சேரும் போது உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது.
மாம்பழம்
தயிரும் மாம்பழமும் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த காம்பினேஷனாக இருக்கலாம். ஆனால், அறிவியல் படி, மாம்பழம் உடலில் சூட்டை அதிகரிக்கும், தயிரோ உடலை குளிர்ச்சி அடைய வைக்கும். இந்த இரண்டையும் நீங்கள் சேர்த்து சாப்பிடும்போது செரிமான நடைமுறையில் ஏற்றத்தாழ்வு உண்டாகிறது.
இதனால் சரும பிரச்சனைகள் வருவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. எனவே இரண்டையும் ஒன்றாக சாப்பிடாதீங்க.
வெங்காயம்
தயிரும் வெங்காயமும் சேர்த்து சாப்பிடுவதால் பெரிதாக எந்த பிரச்சனையும் ஏற்படாது. இருப்பினும், இவற்றை சேர்த்து சாப்பிட்டால் உடலில் சூடு அதிகரித்து செரிமானப் பிரச்சனைகளை உண்டாக்கும்.
மேலும் ஒரு சிலருக்கு இது வயிறு உப்புசம், வயிற்று வலி கூட ஏற்படுத்தலாம்.
பால்
தயிருடன் பாலை சேர்த்து சாப்பிடுவதையும் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் பாலும் தயிரும் சேரும் போது உங்களுக்கு அசிடிட்டி, நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் உருவாகும். மேலும் பால் மற்றும் தயிரில் அதிகளவு புரதமும் கொழுப்பும் இருக்கிறது.
எதுவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாகி அதை சாப்பிட்டால் நஞ்சாகதான் மாறும்.
எண்ணெய்
எண்ணெய்யில் செய்யப்பட்ட அல்லது எண்ணெய் அதிகமுள்ள உணவுகளோடு தயிரை சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் கோளாறு ஏற்படும். இதன் காரணமாக நாள் முழுதும் சோர்வாகவும், மந்தமாகவும் உணர்வீர்கள்.
இதற்காகவே எண்ணெய் அதிகமுள்ள உணவுகளோடு தயிரை சேர்த்து சாப்பிட வேண்டாம் எனக் கூறுகிறார்கள்.