Rain Alert: இன்னும் 5 நாட்களுக்கு.. இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் இன்னும் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
தமிழகத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நிலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
இதனை தொடர்ந்து, வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்றும், இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.