இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள் - மெரினாவில் அதிமுகவினர் அஞ்சலி

tamilnadu jayalalitha- memorial-day
By Nandhini Dec 05, 2021 03:44 AM GMT
Report

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க தலைமைக் கழகம் ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

தமிழக முதலமைச்சராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

மாவட்ட கழக அமைப்புகளிலும் ஜெயலலிதா நினைவு நாளை கடைப்பிடிக்க அதிமுக தலைமை உத்தரவிட்டிருக்கிறது. ஜெயலலிதா நினைவு நாளையொட்டி பல்வேறு மாவட்டங்களிலும் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. 

இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள் - மெரினாவில் அதிமுகவினர் அஞ்சலி | Tamilnadu Jayalalitha Memorial Day