ஈஸியா இந்தியர்களுக்கு குடியுரிமை - எந்த நாட்டிலெல்லாம் தெரியுமா?
சில நாடுகள் இந்தியர்களுக்கு எளிதான குடியுரிமையை வழங்கி வருகின்றன.
குடியுரிமை
மோர்கன் ஸ்டான்லியின் அறிக்கையின் படி, 2014 மற்றும் 2018 க்கு இடையில் மட்டும் 23,000 க்கும் மேற்பட்ட இந்திய கோடீஸ்வரர்கள் குடியுரிமைத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
மாணவர்கள், தற்காலிக பணியாளர்கள், திறமையான தொழில் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா விருப்பங்களை வழங்குவதன் மூலம் ஆஸ்திரேலியா குடியுரிமைக்கான வசதிகளையும் எளிதாக்குகிறது.
நாடுகள் லிஸ்ட்
மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் உள்ளது. பலரால் விரும்பத்தக்க இடமாகவும் இருந்து வருகிறது. இந்தியர்களுக்கு எளிதாக குடியுரிமை வழங்கும் வசதிகளை வழங்குகிறது.
கணிசமான எண்ணிக்கையிலான இந்திய குடிமக்களை நிரந்தர குடியிருப்பாளர்களாக கொண்ட நாடாக கனடா இருந்து வருகிறது.
நாட்டின் புலம்பெயர்ந்தோருக்கான கொள்கைகள் மற்றும் பணி விசாக்கள், வேலை தேடுதல் விசாக்கள், மாணவர் விசாக்கள் உள்ளிட்ட பல்வேறு விசா விருப்பங்களை ஜெர்மனி எளிதாக்குகிறது.
சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான இடமாக நியூசிலாந்து உள்ளது. மாணவர், பணி மற்றும் குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு வகையான குடியேற்ற விசாக்களை வழங்கி வருகிறது.