வெளிநாட்டில் நிரந்தரமா குடியேறனுமா? இந்தியர்களுக்கு கிரீன் கார்டு கொடுக்கும் 5 நாடுகள் - முழு விவரம் இதோ!
India
Student Visa
World
Schengen Visa
Visa-Free Entry
By Vidhya Senthil
இந்தியர்களுக்கு விரைவில் கிரீன் கார்டு கொடுக்கும் 5 நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின் இந்த விசா திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. ஒருவேலை இந்த விசா திட்டமுடிவுக்கு வந்தால், இந்தியர்கள் அமெரிக்காவில் குடியுரிமை (கிரீன் கார்டு) பெறுவது கடினமாகிவிடும். இந்த நிலையில், இந்தியர்களுக்கு விரைவில் கிரீன் கார்டு கொடுக்கும் 5 நாடுகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பிரான்ஸ்:
- பிரான்சில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தால் மாணவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
- முதுகலை படித்திருந்தால் அல்லது சொந்தமாக நிறுவனத்தைத் தொடங்க விருப்பமானவர்கள் நிரந்தர குடியுரிமை பெற முடியும் .
அயர்லாந்து:
- மாணவர் விசாவில் வந்தவர்கள் படிப்பை முடிக்க வேண்டும்.
- Graduate visa பெற்று 2 ஆண்டுகள் வரை வேலை செய்திருந்தால் நிரந்தர குடியுரிமை பெற முடியும் .
- Graduate visa மூலம் ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் முழுநேர வேலை செய்திருந்தால் குடியுரிமை பெற முடியும் .
நார்வே:
- நார்வேவில் நிரந்தர குடியுரிமை பெற நார்வே பல்கலைக்கழக பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- நார்வே மொழியும் தெரிந்திருக்க வேண்டும்.
- உங்கள் பெயரில் குற்றவியல் பதிவு எதுவும் இலையென்றால் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும்.
ஜெர்மனி:
- முதலில் ஜெர்மனியில் ஒரு வேலை தேட வேண்டும்.
- ஜெர்மன் மொழியும் தெரிந்திருக்க வேண்டும்.
- மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட ஜெர்மனியில் நிரந்தர குடியுரிமை பெறுவது எளிது.