தல பொங்கலுக்கு 470 வகை உணவு - மாப்பிள்ளையை பிரமிக்க வைத்த பெண் வீட்டார்

Thai Pongal Puducherry
By Karthikraja Jan 14, 2025 01:00 PM GMT
Report

தல பொங்கல் விருந்தில் 470 வகை உணவு பரிமாறப்பட்டுள்ளது.

பொங்கல் சீர்

தமிழர்களின் பாரம்பரியத்தில் தமிழர் திருநாளான தை பொங்கல் முக்கியமான திருவிழா ஆகும். பொங்கலுக்கு திருமணமாகி சென்ற பெண்ணுக்கு பெண் வீட்டார் சார்பில் சீர் கொடுக்கும் நிகழ்வு இன்றும் கிராமங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

ஏனாம் தல பொங்கல் 470 வகை உணவு

திருமணமான முதல் 3 வருடத்திற்கு பெண்ணின் சகோதரர்கள் தனது சகோதரியின் பிறந்த வீட்டிற்கு சென்று சீர் அளிப்பார்கள். சகோதரர் இல்லாத பட்சத்தில் பெண்ணின் தந்தையே சீர் கொண்டு செல்வார். சிலர் காலம் முழுவதும் பொங்கல் சீர் அளிப்பார்கள். 

மருமகனுக்கு 100 வகையான உணவு - கவனிப்பில் சிலிர்க்க வைத்த மாமியார்!

மருமகனுக்கு 100 வகையான உணவு - கவனிப்பில் சிலிர்க்க வைத்த மாமியார்!

தல பொங்கல்

அதே போல் புதிதாக திருமணமான தம்பதிகள், தங்களது திருமணத்ததிற்கு பின்னர் வரும் முதல் பொங்கலை தல பொங்கல் என கொண்டாடுவார்கள். இந்த தல பொங்கலுக்கு புதுமண தம்பதிகளை பெண் வீட்டிற்கு அழைத்து பெண் வீட்டார் விருந்து வைப்பார்கள். 

தல பொங்கல் 470 வகை உணவு

அதே போல் இந்த ஆண்டு புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் உள்ள தம்பதிக்கு தல பொங்கல் விருந்தில் 470 வகை உணவுகளை வைத்து பெண் வீட்டார் பிரமிக்க வைத்துள்ளனர்.

470 வகை உணவு

ஏனாம் பகுதியில் வணிகர் சங்க கௌரவத் தலைவராக உள்ள சத்யபாஸ்கர் வெங்கடேஸ்வரின் மகள் டாக்டர் ஹரிண்யாவுக்கும் விஜயவாடாவை சேர்ந்த சாகேத்திற்க்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் தனது 4 சகோதரர்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

இன்று தல பொங்கல் கொண்டாட இந்த தம்பதி பெண் வீட்டிற்கு வந்த போது,  20 வகையான அரிசி உணவுகள், 30 வகை புதிய ஊறுகாய், 20 பொடிகள், 40 வகை காய்கறிகள், 20 வகையான பழங்கள், 50-க்கும் மேற்பட்ட இனிப்புகள், என 470 வகை உணவுகளை பரிமாறி வீட்டிற்கு வந்த மாப்பிள்ளையை பிரமிக்க வைத்துள்ளனர்.