43 வயதில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் - அதிர்ச்சி பின்னணி!
நபர் ஒருவர் 16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
திருச்சி, வி.துறையூரில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன் (43). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், லால்குடி பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு முடித்த 16 வயது சிறுமி கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த சிறுமியிடம் பாலசுப்பிரமணியன் தனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கூறி பழகியுள்ளார். மேலும், ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
ஏமாற்றிய கொடூரம்
இதனால் திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். எனவே திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஒரு வாரமாக பேசுவதை நிறுத்தியுள்ளார். மேலும், அவருக்கு ஏற்கனவே திருமணமான செய்து சிறுமிக்கு தெரியவந்துள்ளது.
இதனால் சிறுமி போலீஸில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.