வேலை தருகிறேன்.. 45 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வர் - பகீர் சம்பவம்!
45 பெண்களை பள்ளி முதல்வர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
பாகிஸ்தான், கராச்சியில் குல்ஷான்-இ-ஹதீத் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முதல்வர் மற்றும் உரிமையாளர் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.
அதில், பள்ளி முதல்வருக்கு எதிராக 2 பெண்கள் சாட்சி அளித்தனர். வேலை தருகிறேன் என கூறி அழைத்து, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து மிரட்டி வந்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட 23 வயது பெண் ஒருவர்,
அதிர்ச்சி வாக்குமூலம்
பள்ளி நேரம் முடிந்ததும் நேர்காணலுக்கு வரும்படி கூறினார். முதல்வரின் அலுவலகத்தில் அமரும்படி கூறி, கதவை பூட்டி விட்டு, கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.
அதன்பின், 1 வாரத்திற்கு பின் வேலையில் சேரும்படியும், 25 ஆயிரம் பணம் தருவதாகவும் கூறினார். அதனையடுத்து வேலையில் சேர சென்ற போதும் பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டார். அதனை தடுக்க முற்பட்டேன்.
ஆனால், அவரை அடித்து, துன்புறுத்தி அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமிராவில் காட்சிகள் பதிவாகி உள்ளன. இதனை வெளியிடுவேன் என எச்சரித்ததாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இவர் 45 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்தது. எனவே வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.