செஸ் ஒலிம்பியாட்டில் ஓர் உணவு திருவிழா - 77 மெனு கார்டுகள்.. இத்தனை உணவு வகையா!

Chess Tamil nadu Chennai Olympic Academy
By Sumathi Jul 28, 2022 04:03 AM GMT
Report

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு 700க்கும் மேற்பட்ட உணவு வகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 செஸ் ஒலிம்பியாட் 

சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் நடைபெற உள்ளது. வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதற்கான தொடக்க விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெற உள்ளது.

செஸ் ஒலிம்பியாட்டில் ஓர் உணவு திருவிழா - 77 மெனு கார்டுகள்.. இத்தனை உணவு வகையா! | 44Th Chess Olympiad 2022 Menu Full List Details

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரில் பங்கேற்பதற்காக உலகில் உள்ள 187 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சுமார் 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பதால் அவர்களுக்கான சகல வசதிகளையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

உணவு திருவிழா

குறிப்பாக, வெளிநாட்டு வீரர்களுக்கு அந்த நாட்டு உணவுகளையே வழங்குவதற்காக அனைத்து வகையான உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 77 மெனு கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சிற்றுண்டிகள் மற்றும் சாஸ்கள் உள்பட 3500க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.

செஸ் ஒலிம்பியாட்டில் ஓர் உணவு திருவிழா - 77 மெனு கார்டுகள்.. இத்தனை உணவு வகையா! | 44Th Chess Olympiad 2022 Menu Full List Details

இதுதவிர பிரதான உணவு வகைகளாக 700 வகைகள் இடம்பெற்றுள்ளன. வீரர்களுக்காக காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு மற்றும் உயர்தர தேநீர்கள் தயாரிப்பதற்காக முன்னணி சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய உணவு வகைகள்

இந்த உணவு ஏற்பாடுகளை இந்தியாவின் முன்னணி சமையற்கலைஞரான சென்னையைச் சேர்ந்த ஜி.எஸ். தல்வார் மேற்பார்வையிடுகிறார். வீரர்களுக்கு வழங்கப்பட உள்ள உணவுப்பட்டியல்கள், சூப் வகைகள், ஜூஸ், ஸ்டார்டர்ஸ், பிரதான உணவுகள் மற்றும்

சிற்றுண்டிகள், கோல்ட் ப்ளாட்டர்ஸ், சாலட்ஸ் ஆகியவற்றின் பட்டியலை ஏற்பாடு செய்வதற்கே ஒரு வாரம் எடுத்துக்கொண்டதாக தல்வார் கூறியுள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் ஒருநாள் சாப்பிடும் உணவு அடுத்து

வித்தியாசமான உணவுகள்

எந்தநாளிலும் இடம்பெறாத வகையில் ஒவ்வொரு வேளைக்கும் வித்தியாசமான உணவுகள் இடம்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்காக சிறப்பு ஒயின்கள், பீர்களும் மெனுவில் இடம்பெற்றுள்ளது.

இந்த உணவு வகையில் நமது ஊர் இட்லி முதல் ஆசியா, ஐரோப்பிய உணவு வகைகளும் இடம்பெற்றுள்ளது.