44-வது செஸ் ஒலிம்பியாட் - முதல் வெற்றியை தட்டி தூக்கிய இந்திய வீரர்!
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா.
செஸ் ஒலிம்பியாட்
சென்னை மாமல்லபுரத்தில் இன்று தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அடுத்த மாதம் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஓபன் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்றுள்ளன. இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் களம் காண்கிறது. அதிலும் ஓபன் பிரிவில் இந்தியா ஏ அணி - ஜிம்பாப்வே அணியுடன் போட்டியிருகிறது.
முதல் சுற்று
மேலும் இந்தியா பி அணி - ஐக்கிய அரபு அமீரக அணியுடன் மோதுகிறது. அதேபோல் ஓபன் பிரிவில் இந்திய சி அணி - தெற்கு சூடான் அணியுடன் களம் காண்கிறது. ஒவ்வொரு நாட்டை சேர்ந்த அணியினரும், தங்களுக்கு எதிராக ஒதுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்த அணிகளுடன் களத்தில் உள்ளனர்.
இதில் 2 அணிகளாக களம் காணும் 8 வீரர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்திய வீரர் வெற்றி
அந்த வகையில் தற்போது முதல் சுற்றில் இந்தியன் ஓபன் பிரிவு பி அணியில் வெள்ளை காய்களுடன் களம் இறங்கிய இந்திய அணி வீரர் ரோனக் சத்வானி 36வது நகர்தலில் வெற்றியை தட்டி தூக்கினார். ஐக்கிய அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தினார்.