தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழ்நாடு முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது .
தமிழகத்தில் திமுக அரசானது பொறுப்பேற்றவுடன் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது அதே போல, தமிழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐபிஎஸ் அதிகரிகள் பணியிடை மாற்றம் நடந்து வருகிறது.
ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது . அந்த வகையில், தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐஜி ஆனார் கண்ணன்
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் திண்டுக்கல், மதுரை ராமநாதபுரம் எஸ்.பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.